Vivekananda Navaratri Day 8 Photos and Details

Colorful cultural program of bhanjans and dance-drama Adi Shankara by DAV Hr. Secondary school, Aadambakkam was the opening feature of eighth day of Vivekananda Navaratri Festival. Extracts from Swami Vivekananda’s lectures were read.

Swami Mahamedhananda Maharaj, Editor, The Vedanta Kesari spoke on ‘Message of Swamiji to Students’. Maharaj focused on four important topics on the message of Swami Vivekanadna to students

Success – It is very difficult to define success. In the perception of students it is marks. It is not good to become number one in the class, the victorious students and all the others become losers. We have to redefine success: It is understanding the subject or the art, with a passion of excellence to work for it.

External and internal worlds – The students should be thought to live in the internal world also. It means that leading life with moral practices.

Power Concentration – Success depends on concentration of mind. Students should be given proper direction to concentrate in what they do. Swamiji says: ‘Take care of your thinking. Thinking result in habit. Habits from character.’

Goal – Students should be directed to have a good goal in life. Parents and teachers may help them in this process.

Justice R Mahadevan, Madras High court participated as the chief guest of the function. Some points from his keynote address: Swamiji wished the youth of India, should lead a life of Spirituality and Honesty. He wanted to bring back and develop a humane, to make people as true men. His vision turned towards God, he saw God in all the living beings. He wished all of us to develop this noble practice, to see God in all beings. Swamiji considered – Beyond religions, service to man is the most important thing.

Today’s Navaratri event ended with the grand finale was a drama on “Thirunavukkarasar” staged by Nataka Kaavalar Kalaikoodam. Sri KRS Kumar had directed the drama. He is one of the 63 nayanmars of Saivism. He was inspired by Jainism and he joined it, but due to the Lord Shiva’s blessing he got his incurable disease cured. On the instruction of his sister he came back to Saivism. He praised Lord Shiva through many hymns called as “Thevaram”. His life was well enacted by the drama troop and the audience witnessed it spell bound. More than 500 people witnessed the evening Navaratri event.
சென்னையில் விவேகானந்தர்

விவேகானந்த நவராத்திரி மற்றும் தெய்வீக புத்தக திருவிழா
8ஆம் நாள் – 13/2/2017 – செய்தி குறிப்பு

விவேகானந்த நவராத்திரியின் எட்டாம் நாள் விழா டி.ஏ.வி ஆதம்பாக்கம் பள்ளி மாணவர்களின் பஜனை, நாடகம் மற்றும் நாட்டியத்துடன் தொடங்கியது. சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகளிலிருந்து சில பகுதிகள் வாசிக்கப்பட்டன.
சுவாமி மஹாமேதானந்த மகராஜ், ஆசிரியர், வேதாந்த கேசரி ‘மாணவர்களுக்கு சுவாமி விவேகானந்தரின் செய்திகள்’ என்ற தலைப்பில் பேசினார். மாணவர்கள் நான்கு முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும், சுவாமி விவேகானந்தரின் கண்ணோட்டத்திலும் இதனைக் காணலாம்:

வெற்றி – வெற்றியை வரையறுப்பது மிகவும் கடினம். மாணவர்கள் இதனை மதிப்பெண்கள் என நினைக்கிறார்கள். வகுப்பின் முதல் மாணவனாக வருவது மட்டும் குறிக்கோள் அல்ல. நாம் வெற்றியை இப்படிக் காண வேண்டும்: கல்வி அல்லது கலையை மிக உன்னிப்பாக புரிந்து கொண்டு சிறப்பாக ஆர்வத்துடன் வேலை செய்யவது.

அக மற்றும் புற உலகங்கள் – மாணவர்கள் அக முகமாக மனதை ஒருமைபடுத்தி வாழப் பழக வேண்டும். அது தார்மீக நடைமுறைகள் மூலம் வாழ்க்கை வாழ்வது என்று அர்த்தம்.

சக்தி வாய்ந்த மன ஒருமைப்பாடு – வெற்றி, மனத்தின் ஒருமைப்பாட்டை பொருத்தது. மாணவர்கள் தங்கள் கவனத்தை சரியான திசையில் செலுத்தப் பழக வேண்டும். சுவாமிஜி கூறுகிறார்: ‘உங்கள் சிந்தனையை கவனியுங்கள். சிந்தனை வழியே பழக்கம் வளர்கிறது. பழக்கத்தின் விளைவே மனிதனின் குணம் உருவாகிறது.’

குறிக்கோள் – மாணவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல குறிக்கோள் வேண்டும். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவர்களின் குறிக்கோளை கண்டறிய உதவலாம்.

நீதிபதி ஆர் மகாதேவன், சென்னை உயர் நீதிமன்றம், விழாவின் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் சிறப்புரையிலிருந்து: சுவாமிஜி இந்திய இளைஞர்கள், ஆன்மீகம் மற்றும் நேர்மையான ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்று விரும்பினார். அவர் மனிதாபிமானம் கொண்ட மாந்தர்களை உருவாக்க வேலை செய்தார். பின்னர் அவரது பார்வை கடவுளை நோக்கித் திரும்பியது, அவர் எல்லா உயிர்களையும் கடவுளாகவே பார்த்தார். அவர் அனைத்து மனிதர்களையும் கடவுளாகப் பார்க்க நாம் பழக வேண்டும் என்று விரும்பினார். சுவாமிஜியின் கருத்து – மதங்களுக்கு அப்பால், மனிதமும், மனித சேவையும் மிக முக்கியமான விஷயங்கள்.
இன்றைய நவராத்திரி நிகழ்வின் கடைசி நிகழ்ச்சியாக “திருநாவுக்கரசர்” நாடகம் அரங்கேறியது. இந்த நாடகத்தை ‘நாடகக் காவலர் கலைக்கூடம்’ குழுவினர் நடத்தினர். திரு கே.ஆர்.எஸ் குமார் நாடகத்தை இயக்கியுள்ளார். நாவுக்கரசர் 63 நாயன்மார்களில் ஒருவர். அவர் சமண மதத்தினால் ஈர்க்கப்பட்டு அதில் சேர்ந்தார். ஆனால் சிவபெருமானின் ஆசீர்வாதத்தைப் பெற்றதால், அவரது தீரா நோய் குணமாகியது. தது சகோதரியின் மூலம் அவர் மீண்டும் சைவ மதத்தில் சேர்ந்தார். அவர் சிவபெருமானின் மீது பாடிய பதிகங்கள் “தேவாரம்” என அழைக்கப்படுகின்றன. இந்த நாடகத்தில் அவரது வாழ்க்கை மிக நன்றாக சித்தரிக்கப்பட்டது. பார்வையாளர்கள் அனைவரையும் கவர்ந்தது. மாலை விழாவை 500க்கும் மேற்பட்ட மக்கள் கண்டு களித்தனர்.