Outreach Programme by Principal Commissioner of Income Tax – 9, Event Stills and Details

மத்திய நேரடி வரி வசூல் வாரியத்தின், தன்னிகரற்ற நிர்வாகத்தின் தலைமையின் கீழ், ஸ்ரீ சுஷில் குமார், IRS, முதன்மை தலைமை வருமான வரி ஆணையாளர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அவர்களின் சீரிய முயற்சியால், ஸ்ரீ யஷ்வந்த் யு சவான், IRS, முதன்மை ஆணையர்- 9, சென்னை அவர்களால், வருமான வரி கருத்தரங்கம், சென்னையில் உள்ள தி மதராஸ் கிரானா அசோசியசன் கட்டிடத்தில், 26-09-2018 அன்று நடைபெற்றது.

இந்தக்கருத்தரங்கில் பேசிய ஸ்ரீ யஷ்வண்ட் யு சவான், வருமானவரிச்சட்டத்திற்கு உட்பட்டு, வரவு செலவு கணக்கு புத்தகங்களை பராமரிப்பதன் அவசியம், வருமானத்தை உரிய விதத்தில் தீர்மானித்து அட்வான்ஸ் டாக்ஸ் எப்படி செலுத்துவது, உரிய செலவீனங்களில் வரிப்பிடித்தம் செய்வது, அதனை காலத்தே மத்திய சர்க்கார் கணக்கில் செலுத்துவதன் முக்கியத்துவம், வருமான வரிப்படிவங்களை உரிய காலத்திற்குள் தாக்கல் செய்வதன் அவசியம் குறித்தும் உரையாற்றினார். மேலும் அவர் கூறுகையில் வருமானவரித்துறை நேர்மையாக வரி செலுத்துவோருக்கு தலைசிறந்த சேவை வழங்கிடவே உள்ளது என்றும் உறுதி கூறினார்.

கூட்டத்தில், மளிகை, இரும்பு, ஜவுளி, பைனான்ஸ், தங்கம், சிட், மற்றும் எலக்ட்ரிகல் ஹார்டுவேர் தொழில் செய்வோர் கலந்து கொண்டு தெளிவு பெற்று மகிழ்ந்தனர்.

ஸ்ரீ ஸ்ரீனிவாச ராவ் வானா, IRS, இணை ஆணையர், நான்-கார்பரேட் ரேஞ்ச் 6 & 17, சென்னை , அவர்களும் உரையாற்றினார்.