Chenniyil Vivekanandar – Vivekananda Navaratri – Divine Book Festival Day 9 Photos and Details

 

Chennaiyil Vivekanandar – Vivekananda Navaratri – Divine Book Festival – Feb 6th – 14th 2017

Swami Vivekananada stayed in the Vivekananada Illam, Chennai for 9 days (Feb 6th – 14th) after his triumphant visit of the West. These 9 days are celebrated as Vivekananda Navaratri by the Sri Ramakrishna Math and devotees.

Sri.N.Gopalswami, Chief Election Commissioner inaugurated this year’s Divine Book Festival and delivered the keynote address on 6.2.2017.

Padmasri Nalli Kuppusamy Chettiar, Sri N.Ravi, Director Kasthuri & Sons Ltd (The Hindu), Sri K.Anand, Senior Advocate, Kerala Highcourt and Sri N.Murali, Krishna Sweets participated as Guests of honour. With the benedictory address of Swami Gautamanandaji the inaugural function came to an end.

Students from many schools, devotional organizations and devotees of Sri Ramakrishna Math rendered bhajans and cultural programmes during these 9 days. The Swamis of Sri Ramakrishna math, Velukudi Krishan & Brahmasri Govindapuram Vittaldass Maharaj delivered spiritual discourse and nama sankisrtan. Justices B. Rajendran, K.Vaithiyanadan Editor Dinamani, L.Sabarathinam Chirman, Bharat Vidhya Bhavan, Justice R.Mahadevan Participated as chief guests.

Stage Dramas Sister Nivedita by Prayartana, Thirunavukarasar by Nataka Kavalar kalaikkudam, Dance Drama Aham Bhramasmi by Sheela Unnikrishnan gave good entertainment and spiritual experience to the audience. Sri Sikkil Gurucharan and Anil Srinivasan gave a wonderful combination of vocal and piano. Puppet show on Swami Vivekananda presented by Sri Gananathar Bommai Nadaga Saba and The flute recital by J.A.Jayanth were added attractions to the festival.

Valedictory function of the event was held on 14-2-17. Minsiter for School Education and Sports and Youth Welfare, Tamilnadu Government Ma Foi Sri K Pandiyarajan participated as the chief guest of the program. Sakthi Group, Chaairman, Sri Dr M Manikam was the special guest. Sri U Ve Dushyant Sridhar delivered a Katha Kutcheri on ‘Thamarai Kannan’. He brought out the price worthy facts about the Lotus Eyed avatars of Sri Maha Vishnu, in a humorous way. The kutcheri rendered by Selvi Anahita and Apoorva sisters was mesmerizing.

The special feature of the Vivekananda Navaratri was the Divine Book Festival. Thousands of books were exhibited. Huge number of books were purchased by students and other visitors. This proved that the habit of good reading of the people increase tremendously. The Vivekananada Navaratri gave good thoughts and new perception to everybody.

The Vivekananada Navaratri & the Book Festival were successful in propagating the messages of Swami Vivekananda.

Dinamani, Dinamalar, The Hindu & TV channels brought out the news of Vivekananda Navaratri every day. We thank all of them.

 

சென்னையில் சுவாமி விவேகானந்தர்

விவேகானந்த நவராத்திரி – தெய்வீகப் புத்தகத் திருவிழா – பிப்ரவரி 6 முதல் 14 வரை 2017

1897ல், சுவாமி விவேகானந்தர் 9 நாட்கள் விவேகானந்தர் இல்லத்தில்

9 நாட்கள் பிப்ரவரி 6 முதல் 14 வரை தங்கினார். இந்த 9 நாட்கள் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் மற்றும் பக்தர்களால் விவேகானந்தர் நவராத்திரி என்று கொண்டாடப்படுகிறது.

இந்த வருடம் விவேகானந்தர் இல்லத்தில் பிப்ரவரி 6- 14 இந்த நவராத்திரி விழா கொண்டாடப்
பட்டது. திரு என். கோபாலசுவாமி முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் விழாவை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
பத்மஸ்ரீ நல்லி செட்டியார், ஸ்ரீ என் ரவி, இயக்குனர், கஸ்தூரி அண்ட் சன்ஸ் லிமிடெட்
(தி இந்து), ஸ்ரீ கே.ஆனந்த், மூத்த வழக்கறிஞர், கேரள உயர் நீதிமன்றம் மற்றும் ஸ்ரீ என் முரளி, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு உரைகள் நிகழ்த்தினர்.

அன்று சுவாமி கௌதமானந்தஜி மகராஜ் அவர்களின் ஆசியுரையுடன் துவக்க விழா நிறைவு பெற்றது.
இந்த ஒன்பது நாட்களும் பல பள்ளிகள் மாணவர்கள், பக்தி அமைப்புகள், ராமகிருஷ்ண பக்தர்கள் அளித்த பஜனை மற்றும் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கின. ராமகிருஷ்ண மடத்துத் துறவிகள், வேளுக்குடி கிருஷ்ணன், கோவிந்தபுரம் பிரம்மஸ்ரீ விட்டல்தாஸ் மகராஜ் ஆகியோரின் ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் நாமசங்கீர்த்தனம், கலியமூர்த்தி ஐ.பி.எஸ்., நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.ராஜேந்திரன், தினமணி ஆசிரியர் திரு. வைத்தியநாதன், போன்றோரின் உரைகளும் இடம் பெற்றன.

பிரயத்தனா குழு வழங்கிய சகோதரி நிவேதிதை, நாடகக்காவலர் கலைக்கூடம் வழங்கிய திருநாவுக்கரசர் ஆகிய நாடகங்களும் ஷீலா உன்னிகிருஷ்ணன் குழுவினர் வழங்கிய அஹம் பிரம்மாஸ்மி நாட்டிய நாடகங்கள் நல்ல ஆன்மிகச் சிந்தனையையும், தரமான ரசனைக்கேற்றவையாக இருந்தன. திரு சிக்கில் குருசரண் மற்றும்
திரு அனில் சீனிவாசன் வழங்கிய வாய்ப்பாட்டு மற்றும் பியானோ இணைந்திசை நிகழ்ச்சி ஸ்ரீகணநாதர் பொம்மை நாடக விழா வழங்கிய சுவாமி விவேகானந்தர் பொம்மலாட்டம், ஜே.ஜெயந்த் அவர்களின் புல்லாங்குழல் இசை ஆகியவை விழாவிற்குச் சிறப்பு சேர்த்தன.

14.2.2017 அன்று விவேகானந்த நவராத்திரியின் நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாட்டின் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் திரு. மாஃபா கே.பாண்டியராஜன் தலைமை தாங்கினார். சக்தி குழுமத்தின் தலைவர் திரு.மாணிக்கம் கலந்து கொண்டார். உ. வே. துஷ்யந்த் ஸ்ரீதர், தாமரை கண்ணன் என்ற தலைப்பில் மஹா விஷ்ணுவின் அவதாரங்களின் கண்ணழகை எடுத்துக்காட்டுகளுடன் நகைசுவையுடன் விவரித்தார். அனாஹிதா, அபூர்வா சகோதரிகளின் இசை கதா கச்சேரிக்கு உறுதுணையாய் விளங்கியது.

இந்த வருடத்து விவேகானந்த நவராத்திரி விழாவில் சிறப்பம்சமாக விளங்கிய தெய்வீகப் புத்தகத் திருவிழாவில் நமது மடத்தின் ஆயிரத்திற்கும் மேலான புத்தகங்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தன. ஏராளமான பள்ளி மாணவர்களும் பொதுமக்களும் தினந்தோறும் கண்காட்சிக்கு வந்து அதிக அளவில் புத்தகங்களை வாங்கிச் சென்றது இன்றைய நிலையிலும் நல்ல நூல்களை வாசிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதை நிருபித்துள்ளது.

ஏறக்குறைய 5000 பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 10,000-க்கும் மேற்பட்டோர் இந்த விழாக்களுக்கு வருகை தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் நல்ல எண்ணங்களை
யும் புதிய சிந்தனைகளையும் விதைக்கக்கூடிய இந்த விவேகானந்த நவராத்திரி சுவாமிஜியின் அருட்கட்டளைகளையும் வீரமிக்க செய்திகளையும் பலருக்கும் எடுத்துரைப்பதில் வெற்றி அடைந்துள்ளது.

9 நாட்கள் பற்றிய நிகழ்ச்சிகளை வெளியிட்ட தினமணி, தினமலர், தி இந்து, மற்றும் தொலைக்காட்சி சேனல்கள் ஆகியவற்றிற்கு நன்றி.