Bala Kailasam Memorial Awards (BKMA) 2016

சினிமா ராண்டவூ

”சினிமாராண்டவூ” என்பது லாப நோக்கமற்ற ஒரு அறக்கட்டளை. நடிகையும், தொழில்முனைவோருமான ஷைலஜா செட்லூர் இதனை உருவாக்கிய நிர்வாக அறங்காவலர் ஆவார். திரைப்பட இயக்குனர் நாகா, அருண்மணி பழனி ஆகியோர் மற்ற அறங்காவலர்கள் ஆவார்கள். சவேரா ஓட்டலின் ஜேஎம்டியான நீனா ரெட்டியே இதன் ஆதரவாளர் ஆவார். அறக்கட்டளையின் செயல்பாடுகளை நல்கி வழங்கி ஆதரிக்கும் பிற ஆதர்வாளர்கள் அறக்கட்டளைச் செயல்பாடுகளை நடத்துகிறார்கள்.
படைப்பு சக்தி மிக்க கலைகளின் மூலமாக சமூக உரையாடல்களை நிகழ்த்தும் களங்களை ஊக்கப்படுத்துவதே ”சினிமாராண்டவூ”வின் குறிக்கோளாகும். கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் சினிமா விமர்சனம் அது குறித்த பிற செயல்பாடுகளை உருவாக்குவது இதன் திட்டமிடல்களின் பகுதியாகும்.மனிதநேயமிக்க கல்வி மற்றும் விழிப்புணர்ச்சி சினிமாத் துறையின் சில ஒழுங்கு செய்யப்படாத பகுதிகளில் சமூக முயற்சிகளை இவ்வறக்கட்டளை உருவாக்குகிறது.

அகொட்ட்பர் 2012இல் சவேரா ஓட்டலில் மாதம் ஒருமுறை கூடும் சினிமா சங்கமாக சினிமாராண்டவூ தொடங்கியது. மாதம் தோறும் ஒரு சினிமாவை திரையிட்டு ஒரு சிறப்பு விருந்தினரோடு சம்பிரதாயமற்ற ஊரையாடல்களை நிகழ்த்தினோம்.சினிமா ஒரு கேளிக்கையாக மட்டுமில்லாமல் அது ஒரு போதுமான அர்த்தமுள்ள சமூகச் செயல்பாடாக சினிமாவின் மீதான காதலைக் கொண்டாடுவது இதன் நோக்கம். சினிமாவைப் பார்த்து அதனை விமர்சனம் செய்யும் பல்வேறு குழுக்கள் எங்களிடம் உண்டு. தமிழ், இந்திய, உலகப் படங்களில் தங்களுக்கு விருப்பமானவற்றைத் தேர்ந்தெடுத்து அதனைப் பற்றிப் பேச சினிமா அறிஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறோம். மீடியா மற்றும் படைப்பு சக்தி மிக்க துறைகளிலிருந்து பல்வேறு ஆளுமைகள் மாதாந்திர கூட்டங்களில் பங்கு கொண்டு சினிமா பற்றிய தங்கள சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.பல்வேறு கோணங்களில் சினிமா கலையை ஒவ்வொரு திரையிடலிலும் ஆராய்வது இதன் சிறபம்சமாகும். சினிமா கலை , தொழில்நுட்பம் பற்றிய வர்க்ஷாப்புகளை நடத்துவது மட்டுமின்றி சினிமா நிபுணர்கள் தொடர்ந்து தடையில்லாமல் நடந்த இந்த கூட்டங்களைல் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

2015இல் சினிமாராண்டவூ” ”பாலா கைலாசம் நினைவு விருது” ஒன்றை உருவாக்கி பெருமை கொண்டது. சமூகத்தின் முன்னேற்றத்துக்காக மீடியாவைப் பயண்படுத்த வேண்டும் என்று விரும்பிய, ஒரு தொலைக்காட்சி ஆளுமையும், செயல்பாட்டாளரும், ஆவணப்பட தயாரிப்பாளருமான பாலா கைலாசத்தின் சாரம், பார்வை ஆகியவற்றைக் கொண்டாடும் விதமாக இந்த விருது உண்டாக்கப்பட்டது. பிகே என்று அன்போடு அழைக்கப்பட்ட பாலா கைலாசம் மனித வாழ்க்கையும் அதன் பொறுப்புணர்ச்சியும் என்பதில் ஆழக்கால்பட்டவர். அவரைப் பின்பற்றியவர்களுக்கு அவரது அகால மரணம் பேரதிரதிர்ச்சியாக அமைந்தது. ஆனாலும் அவரது தணியாத ஆர்வம் நம்மை வழிநடத்துகிறது. எனவே மீடியா சமூகத்தின் மீது கொண்டிருக்கும் தாக்கத்தின் மீது கவனம் குவிப்பதற்காக இந்த நினைவு விருது உண்டாக்கப்பட்டுள்ளது.அச்சு ஊடகம், உலகளாவிய வலைத்தளம், தொலைக்காட்சி, வானொலி, ஆவணப்படம் ஆகிய துறைகளில் இயங்கும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் சமூக மற்றத்துக்காக இயங்குபவர்களைத் தேர்ந்தெடுத்து இவ்விருது வழங்கப்படுகிறது. இவ்விருதைப் பெறுபவர்கள் சமூகத்தைத் தொட்டுப்பேசி இந்தியாவில் மாற்றங்களை உருவாக்கியவர்களாகவும், சமூகம், மாநிலம், நாடு தழுவிய சமூக முன்னேற்றத்துக்கான பார்வை மாற்றத்தை உருவாக்கிய அமைப்புகள் அல்லது சிறப்பான தனிமனிதர்களாகவும் இருத்தல் வேண்டுமென ராண்டவூ விரும்புகிறது.