காமெடி, செண்டிமென்ட் கலந்து படமாக்கப்பட்டிருக்கு யானைமேல் குதிரை சவாரி

முயற்சி பண்ணாமலே முடியாதுன்னு முடிவு பன்றதுதான் உலகத்துலையே நம்பர் ஒன் முட்டாள்தனம்”-ங்கிறத மனசுல வச்சுக்கிட்டு ஒரு குரூப் அவங்களால முடியாத காரியத்துக்காக முயற்சி பன்றத காமெடி, செண்டிமென்ட் கலந்து படமாக்கப்பட்டிருக்கு யானைமேல் குதிரை சவாரி.

நான் கடவுள் ராஜேந்திரன், அர்ச்சனா சிங், லொள்ளுசபா சாமிநாதன், வழக்குஎண் முத்துராமன், கிருஷ்ணமூர்த்தி, நந்தகுமார், மிப்பு நடித்திருக்கிறார்கள்.

பாடல்கள் இசை இமாலயன், பிண்ணனி இசை தாஜ்நூர், ஒளிப்பதிவு மோகன், எடிட்டிங் கணேஷ் குமார். நடனம் பாபி ஆன்டனி,

சென்னை, மற்றும் அரக்கோணம், திருச்சி சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்திருக்கிறது.

யானைமேல் குதிரை சவாரி பேட்லர்ஸ் சினிமா சார்பாக எழுதி, இயக்கி, தயாரித்திருப்பவர் கருப்பையா முருகன்.