ஒழுக்கம் தான் வாழ்வில் முக்கியம் அதை ரசிகர்கள் கடைபிடிக்க வேண்டும்- ரஜினி

நிகழ்வை ஒருங்கிணைத்த காவல்துறை உட்பட அனைவருக்கும் நன்றி. ஊடகங்கள் என்னை விரட்டுகிறார்கள். நான் பேசினால் அது சர்ச்சை மற்றும் விவாதமாக மாறுகிறது. அரசியலில் எதிர்ப்புதான் மூலதனம். அரசியலில் எதிர்ப்புதான் மூலதனம். 23 வருடங்கள் தான் கர்நாடகாவில் இருந்தேன் 40 வருடத்திற்கும் மேலாக தமிழகத்தில் இருந்தேன். தமிழர்கள் தான் என்னை தமிழர் ஆக்கினார்கள். நான் பச்சைத் தமிழன் தான். என்னை இங்கிருந்து போ என்றால் இமயமலை தான் போவேன். சீமான் ஒரு போராளி அவரின் கருத்துகளை கேட்டு பிரமித்திருக்கிறேன். அரசியலில் system கெட்டு போய் இருக்கிறது எதிர்ப்பு இருந்தால் தான் நாம் வளரமுடியும் ரசிகர்கள் குடும்பத்தை கவனிக்க வேண்டும்.. போர்(அரசியல்) வரும்போது பார்த்துக்கொள்வோம்.ரஜினி தனது உரையை முடித்தார்