உதயநிதி ஸ்டாலின் – மஞ்சிமா மோகன் நடிக்கும் லைகா புரொடக்ஷன்ஸ் 9 – படப்பிடிப்பு நிறைவடைந்தது

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், கௌரவ் நாராயணன் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் – மஞ்சிமா மோகன் நடிக்கும்.

“லைகா புரொடக்ஷன்ஸ் 9” – படப்பிடிப்பு நிறைவடைந்தது. தொடர் வெற்றி படங்களைத் தயாரித்து வரும் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 9வது படத்தைத் தூங்காநகரம், சிகரம் தொடு என இரண்டு வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் கௌரவ் நாராயணன் இயக்கியுள்ளார்

உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும் மஞ்சிமா மோகன் கதாநாயகியாகவும் நடிக்கும் இப்படத்தில் சூரி, ராதிகா சரத்குமார், ஆர்.கே.சுரேஷ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

சென்னை, அலஹாபாத், ஹத்ராபாத், பெங்களூரு, திருவண்ணாமலை, ஓமன் எனப் பல இடங்களில் நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று இனிதே நிறைவடைந்தது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பெயர் மற்றும் இசை வெளியீடு மற்றும் படம் வெளியீடு தேதிகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளன.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் :-

எழுத்து இயக்கம் – கௌரவ் நாராயணன்
தயாரிப்பு – லைகா புரொடக்ஷன்ஸ்
இசை – டி.இமான்
ஒளிப்பதிவு – ரிச்சர்ட் M.நாதன்
கலை – விதேஷ்
படத்தொகுப்பு – KL. பிரவீன்
சண்டைப்பயிற்சி – திலிப் சுப்பராயன்
மக்கள் தொடர்பு – நிகில்
தயாரிப்பு நிர்வாகம் – வெங்கட்.K
நிர்வாகத் தயாரிப்பு – S.பிரேம்