அடங்காதே படத்தின் இசைத்துணுக்கு இன்றுமுதல்

ஸ்ரீ கிரின் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில், சண்முகம் முத்துசுவாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாகவும் சுரபி கதாநாயகியாகவும் நடிக்கும் படம் “அடங்காதே”. நடிகர் சரத்குமார் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்.
இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள “அடங்காதே” படத்தின் இசை உருவான விதத்தை ஜி.வி.பிரகாஷ் மற்றும் அருண்ராஜா காமராஜா விவரிக்கும் இசைத்துணுக்கை இன்று மாலை 6 மணியளவில் ஜி.வி.பிரகாஷ் தனது டிவிட்டர் தளத்தில் வெளியிடவுள்ளார்.
அடங்காதே படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் டீசர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:
இயக்கம் – சண்முகம் முத்துசாமி
தயாரிப்பு – M.S.சரவணன்
இசை – ஜி.வி. பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு – PK வர்மா
படத்தொகுப்பு – விவேக் ஹர்ஷன்
சண்டைபயிற்சி – திலிப் சுப்பராயன்
நடனம் – பாபா பாஸ்கர், ஷெரிப்
மக்கள் தொடர்பு – நிகில்
தயாரிப்பு நிர்வாகம் – M.செந்தில்
நிர்வாக தயாரிப்பு – M.சுரேஷ் ராஜா, அருண் புருஷோத்தமன், T.ரகுநாதன்