தமிழ் செய்திகள்

ஜே.கே.ரிதீஷ் Ex MP தயாரிக்கும் “தப்பாட்டம்”

Sakiya Celluloids ஜே.கே.ரிதீஷ் Ex MP தயாரிக்கும் “தப்பாட்டம்” நடிகராகவும் அரசியல் பிரமுகராகவும் பலராலும் நன்கு அறியப்பட்டவரான ஜே.கே.ரிதீஷ் Ex MP, தனது தயாரிப்பு நிறுவனம் சாகியா செல்லுலாய்ட்ஸ் மூலம் “தப்பாட்டம்” எனும் படத்தை தயாரிக்கின்றார். இப்படம் இவர் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாகும். தப்படிக்கும் கலைஞனுக்கும், ஒப்பாரி வைக்கும் பெண்ணுக்கும் காதல் மலர்கிறது. இருவரும் ஊரே மெச்சும் சிறந்த தம்பதியாக வாழ்கின்றனர். இவர்களின் வாழ்க்கையில் எதிர்பாராவிதமாக ஒரு சம்பவம் நிகழ்ந்து இவர்களது உறவில் பிளவை ஏற்படுத்துகிறது. இருவராலும் பிரச்சனைகளை சமாளிக்க முடிந்ததா, மீண்டு வந்தார்களா என்பதை அனைத்து ...

Read More »

லிப்ரா புரோடக்ஷன், வனிதா பிக்சர்ஸ் தயாரிப்பில் ரவீந்தர் சந்திரசேகரன் வழங்கும் “நட்புனா என்னனு தெரியுமா”

பிற தொழில்களில் மேன்மையான பதவியில் வகித்தாலும் சினிமாவின் மேல் உள்ள தீராத ஆசையால் தயாரிப்பாளர்களாக ஆனவர்கள் பல பேர். அப்படி தயாரிப்பாளர்களாக உருவானவர்களில் முன்னோடியாய் விளங்குபவர் “லிப்ரா புரோடக்ஷன்ஸ்” ரவீந்தர் சந்திரசேகரன். சுட்டகதை, நளனும் நந்தினியும் என இரு வித்தியாசமான படங்களை தயாரித்து தனது தயாரிப்பு நிறுவனத்திற்கென ஒரு முத்திரை பதித்து கொண்ட “லிப்ரா புரோடக்ஷன்ஸ்”ரவீந்தர் சந்திரசேகரன் மீண்டும் ஒரு புதிய படத்தை தயாரிக்கின்றார். “நட்புனா என்னனு தெரியுமா” என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் சிவக்குமார் இயக்குகிறார். இவர் இயக்குனர் நெல்சனிடம் உதவி ...

Read More »

திருக்குமரன் எண்டெர்டெய்ன்மெண்ட் வழங்கும் “அதே கண்கள்”

“அதே கண்கள்” இயக்கம் : ரோகின் வெங்கடேசன் பல அறிமுக இயக்குனர்களுக்கு வெற்றி வாய்ப்புகளை அளித்த திருக்குமரன் எண்டெர்டெய்ன்மெண்ட் மேலும் ஒரு புதுமுக இயக்குனர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் “அதே கண்கள்” எனும் படத்தை பிரம்மாண்டமாகவும், அதே நேரம் அனைத்து தரப்பு மக்களும் ரசித்து பார்க்கும் வண்ணம் ஜனரஞ்சகமான முறையில் தயாரித்துள்ளது. சமையல் கலைஞனான வருண், தனியாக ஒரு ரெஸ்டாரண்ட் நடத்தி வருகிறான். பத்திரிகையாளரான சாதனா, வருணின் நீண்ட காலத் தோழி. அவனை மனதார விரும்புகிறாள். சாதனா, வருணின் பெற்றோரைச் சந்தித்து, தனது திருமண ஆசையைத் ...

Read More »

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கௌரவ் நாராயணன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் – மஞ்சிமா மோகன் நடிக்கும் “லைகா புரொடக்ஷன்ஸ் 9”

தூங்காநகரம், சிகரம் தொடு என இரண்டு வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் கௌரவ் நாராயணன் தற்போது லைகா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். தொடர் வெற்றி படங்களை தயாரித்து வரும் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 9வது படம் இது. உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும் மஞ்சிமா மோகன் கதாநாயகியாகவும் நடிக்கும் இப்படத்தில் பிரபல நட்சத்திரங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். சிகரம் தொடு படத்திற்கு பின் மீண்டும் இசையமைப்பாளர் டி.இமான் கௌரவ் நாராயணனுடன் இணைந்து பணியாற்றுகிறார். டிமான்டி காலனியில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய அரவிந்த்சிங் இன்னும் ...

Read More »

திருநங்கை ஜீவா என்கிற ஸ்நேகா நன்றி கடிதம்

தர்மதுரை திரைப்படத்தில் வாட்ச்வுமனாக நடித்து எல்லோரிடமும் பாராட்டைப்பெற்ற திருநங்கை ஜீவா என்கிற ஸ்நேகா கூறியதாவது… என் சொந்த ஊர் சிவகாசி,நான் திருநங்கை என்று தெரிந்ததும் என்னுடைய 13 ம் வயதில் வீட்டை விட்டு வெளியேறி சென்னை வந்தேன். கோயம்பேட்டில் டீ கடையில் வேலை பார்த்தேன். சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு நிறைய சினிமா கம்பெனிகளில் வாயப்புக்காக ஏறி இறங்கினேன். சில சினிமா கம்பெனிகளில் உள்ளே நுழைய கூட அனுமதிக்கவில்லை. சில கம்பெனிகளில் போட்டோ கேட்பார்கள். எப்படி போட்டோ கொடுப்பது என தெரியாமல் பாஸ்போட் போட்டோக்களை கொடுத்து ...

Read More »

சென்னை வாலிபரின் இரட்டை கின்னஸ் சாதனை

மாரத்தான் தொடர் ஐயர்னிங் செய்து ஏற்கனவே 100 மணி நேரத்தில் செய்திருந்த கின்னஸ் சாதனையை 26 மணி நேரத்தில் முறியடித்து புதிய சாதனை செய்தார் சென்னை வாலிபர் டேனியல் சூர்யா. இவர் சாதனை முறியடித்த பிறகும் தொடர்ந்து ஐயர்னிங் செய்து வருகிறார். இந்த சாதனையை 25ம் தேதி காலை 9.05 மணிக்கு சென்னை மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார். 5 நாள் முடிவில் 7 ஆயிரம்  துணிகளை தாண்டி ஐயர்னிங் செய்து கின்னஸ்சில் புதிய இரட்டை சாதனை நிகழ்த்தி இருக்கிறார். 5 நாள் ...

Read More »

எஸ்.ஆர்.நாதன் இறுதி அஞ்சலியில் தஞ்சாவூரு மண்ணு எடுத்து பாடல்

சிங்கப்பூர் முன்னாள் ஜனாதிபதி  எஸ்.ஆர்.நாதனின் இறுதிச் சடங்கு இன்று நடைபெற்றது.உலகத் தலைவர்கள் கூடியிருந்த அந்த நிகழ்வில் எஸ்.ஆர்.நாதனுக்குப் பிடித்த கவிஞர் வைரமுத்துவின் பாடலான தஞ்சாவூரு மண்ணு எடுத்து என்ற பாட்டு அரசு மரியாதையோடு ஒலிபரப்பப்பட்டது. தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட எஸ்.ஆர்.நாதன், தனக்கு எந்த ஊர் சொந்த ஊர் என்று தெரியாது-அதனால் இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் இதில் ஏதேனும் ஓர்  ஊர் என் சொந்த ஊராக இருக்குமோ என்று உணர்ச்சிவசப்படுவதாகக் கவிஞரிடம்  சொல்லியிருக்கிறார். சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழக கலாசார நிலையத்தில்  நிகழ்ந்த இறுதி அஞ்சலியில் ...

Read More »

100 மணி நேர சாதனையை 26 மணி நேரத்தில் முறியடித்து கின்னஸ் உலக சாதனை செய்தார் டேனியல் சூர்யா

ஆஸ்திரேலியர் 100 மணி நேர சாதனையை 26 மணி நேரத்தில் முறியடித்து கின்னஸ் உலக சாதனை செய்தார் சென்னை வாலிபர் டேனியல் சூர்யா.  ஆஸ்ரேலியாவை சேர்ந்த வாலிபர்  மாரத்தான் ஐயர்னிங் மூலம் 100 மணி நேரத்தில் 2000 துணிகள் ஐயர்னிங் செய்து கின்னஸ் சாதனை படைத்தார். இவரின் சாதனையை முறியடிக்க சென்னை வாலிபர் டேனியல் சூர்யா 101 மணி நேர மராத்தான் ஐயர்னிங் நிகழ்ச்சியை சென்னை ஸ்பென்சர் பிளாசா அரங்கில் 25ம் தேதி காலை தொடங்கினார். சென்னை மாநகராட்சியின் வணக்கத்துக்குரிய மேயர் சைதை துரைசாமி ...

Read More »